search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை திருமணம்"

    • நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
    • மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி:

    குன்னூரை சேர்ந்தவர் காட்வின்(22). இவா் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    விடுமுறை நாட்களில் சொந்த ஊா் சென்று வந்த இவருக்கு, அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.

    இதைத் தொடா்ந்து காட்வின் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்த சிறுமி 7 மாதம் கா்ப்பம் அடைந்துள்ளார்.

    சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் கூடி பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் பிரசன்ன தேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும் இதுகுறித்து குன்னூா் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    ஊட்டி அருகே உள்ள புதுமந்து பகுதியை சோ்ந்தவா் ராஜன்(26). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. நேற்று 17வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரசன்ன தேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இருவீட்டு பெற்றோரிடமும் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

    மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையும் வரை திருமணம் செய்யமாட்டோம் என ஒப்புதல் கடிதம் கொடுத்தனர்.

    அதேபோல நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.

    மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மணமகளாக சென்ற 20 நாட்களில் கணவரை பிரிந்து சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • மணமகளாக சென்ற 20 நாட்களில் கணவரை பிரிந்து சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இந்த வாலிபருக்கும் துறையூர் பச்சைபெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 2021 நவம்பர் 10-ந் தேதி திருமணம் நடந்தது.

    புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு அந்த வாலிபர் தாலி கட்டினார். பின்னர் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் ஓரிரு வாரங்களில் பக்குவப்படாத வயதில் திருமண வாழ்க்கையை தொடங்கிய சிறுமிக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வாலிபர் சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமும் செய்துள்ளார்.

    இதையடுத்து மணமகளாக சென்ற 20 நாட்களில் கணவரை பிரிந்து அந்த சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கருவை சுமந்த அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரின் தாயார் இரவு 7 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு பச்சைபெருமாள் பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கே டாக்டர் இல்லை. வெளியில் சென்றுள்ள டாக்டர் வருவதற்கு இரவு 10 மணி ஆகும் என அங்கு பணியில் இருந்த நர்சுகள் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு வெளியே சிறுமி காத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரி அருகாமையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் சென்று சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் குழந்தையை அங்கேயே அனாதையாக போட்டுவிட்டு தாயும் மகளும் தப்பிச் சென்றனர். இதற்கிடையே இரவு 10 மணிக்கு டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் நோயாளியை தேடியபோது, பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் இருந்து சிசுவின் அழுகை சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி சமூக நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த உப்பிலியபுரம் சமூக நலத்துறை அலுவலர் விஜயா, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியையும் அவர் பெற்றெடுத்த குழந்தையையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    15 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
    • சமூக அக்கறையுடன் கையாள வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பாலக்கரையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம், யுனிசெப் மற்றும் தோழமை தன்னார்வலத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பெரம்பலூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்பணியை சமூக அக்கறையுடன் கையாண்டு பொதுமக்களிடம் விரைந்து செல்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் சீரார் நிதி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட சட்ட ஆலோசனைகளும், குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்தோடு ஊடகங்களில் குழந்தைகள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (மாநில வள மையம்) பூரணி, மூத்த பத்திரிகையாளர் ராமசுப்ரமணியன் (எ) மணி, தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் தேவநேயன், வழக்கறிஞர் சுப. தென்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மகாகிருஷ்ணன், பெருமாள், தோழமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ரோவர் கல்லூரியில் பயிலும் ஊடகவியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடந்த கணக்கெடுப்பின் போது 3,000 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது தெரியவந்தது.
    • பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து உயர் கல்வியை ஊக்குவித்தும், குழந்தை திருமணத்தை தடுத்தும் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    கரூர் :

    கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாளியாம்பட்டியில் மாவட்ட நிர்வாகம், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் "பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு" என்ற (பள்ளி செல்லா குழந்தைகள் திருமணம், குழந்தை தொழிலாளர்களுக்காக) விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தது:

    கரூர் மாவட்டத்தில் கொரோனா காலங்களில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடந்த கணக்கெடுப்பின் போது 3,000 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.டி.மலை ஊராட்சி வாளியாம்பட்டியில் 32 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் அவர்களின் தேவைகளை வீடு வீடாக சென்று அவர்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    ஆகையால் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து உயர் கல்வியை ஊக்குவித்தும், குழந்தை திருமணத்தை தடுத்தும் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தும் பெண்கள் சிறப்பு ஓய்வறை அமைத்து தரப்படும். அந்த ஓய்வறையில் சுடு தண்ணீர் வசதி, கழிப்பறை, குளியலறை வசதி, புத்தகங்கள், தொல்லைக்காட்சி, சாதனை பெண்களின் புகைப்படங்கள் வைக்கப்படும்.

    மேலும் நாளை (ஆக. 1ம் தேதி) பேருந்துகள் தொடங்கப்பட்டு அனைத்து குழந்தைகளுடன் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2021-ல் 146 குழந்தை திருமணங்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது. நடப்பாண்டில் 46 திருமணங்கள் நடந்துள்ளன.
    • குழந்தை திருமண சட்டப்படி சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மண்டப உரிமையாளர் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

    கோவை:

    இன்றைய நவீன காலத்தில், சமூக வலைதளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது.

    இதனால் பள்ளி பருவத்திலேயே, பருவக் கோளாறால் பலரும் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து, வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

    கோவை மாவட்டத்தில், 2019-2020-ம் ஆண்டு வரை குழந்தை திருமணங்கள் 100-க்கும் குறைவாக இருந்த நிலையில் கொரோனாவுக்கு பின்பு 2021-ம் ஆண்டு 146, நடப்பாண்டு மே மாதம் வரை 46 என 192 குழந்தை திருமண புகார்கள் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பதின் பருவத்தில் ஏற்படும் காதல், குடும்பங்களின் வறுமை, பெற்றோர் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளே பெரும்பாலும் குழந்தை திருமணங்களில் சிக்கி கொள்கின்றனர்.

    இதில், பெற்றோர் செய்து வைத்த திருமணத்தை விட காதல் திருமணம் செய்தவர்களே அதிகம்.

    திருமணத்திற்கு முன்பே உறவு வைத்து கொண்டு திருமணம் செய்த வேதனைக்குரிய சம்பவங்களும் உள்ளன. 2021-ல் 146 குழந்தை திருமணங்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது. நடப்பாண்டில் 46 திருமணங்கள் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்.

    குழந்தை திருமண சட்டப்படி சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மண்டப உரிமையாளர் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

    குற்றத்துக்கு 2 முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டணை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தற்போது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவிகள் மட்டுமல்லாது, மாணவர்களிடமும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட 16 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 22), செல்போன் கடை ஊழியர்.

    இவருக்கும் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    இதுகுறித்து மதுரை விடியல் ஹோம் குழந்தைகள் காப்பக அலுவலர் மாரீசுவரிக்கு தகவல் கிடைத்தது. அவர் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமர், சிறுமியின் உறவினர்கள் ரெங்கசாமி, எல்லம்மாள், சரவணன், வித்யா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×